×

இருக்கன்குடி கோவிலுக்கு ரூ.2.29 கோடியில் வெள்ளி தேர்

சாத்தூர்,மார்ச் 19: சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தென்மாவட்டத்தை சேர்ந்த விருதுநகர், தூத்துக்குடி,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். இந்த கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். விழாவை தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை வைத்து வந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 29லட்சம் மதிப்பில் வெள்ளித் தேர் செய்யும் பணி மகாபலிபுரத்தில் உள்ள அரசு நிறுவனமான பூம்பூகார் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நடை பெற்று வருவதாக கோயில் இணை ஆணையாளர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Tags : Istankudi Temple ,
× RELATED 10 கோடி தங்க முதலீட்டுப் பத்திரத்தை...