×

மணல் அள்ள அனுமதிக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 17: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைக்கரை ஆற்றில், சனவேலி, கொக்கூரணி, செட்டியகோட்டை, ஆனந்தூர், கோவிந்தமங்கலம், குலமாணிக்கம் வெட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் மணல் உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மணல் திருட்டு நடந்து வருகின்றது. மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது போலீசார் அடிக்கடி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டுக்களை தடுக்கும் விதமாகவும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிழைப்புக்கு வழிகாட்டும் விதமாகவும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும்.

இதனால் மணல் திருட்டுக்களை தடுப்பதுடன், மணல் தட்டுப்பாட்டால் தடைபட்டு வரும் கட்டுமானப் பணிகளும், விரைந்து நடைபெறும். இதனால் கட்டிட தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கட்டிடம் கட்டும் உரிமையாளர்களுக்கும் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். ஏற்கனவே இந்த பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. எனவே கோட்டைக்கரை ஆற்றில், மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளி செல்வதற்கு அரசு அனுமதி வழங்கி ஏழை எளிய தொழிலாளர்களின் நலனை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...