×

காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்

ஸ்ரீபெரும்புதூர், அக். 1: காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஸ் சிலிண்டர் தீ விபத்து தொடர்பாக, ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அஜய்குமார், மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள், மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊராட்சி தலைவர் அஜய் குமார் நேற்று கைது செய்யபட்டார். இவர், சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக கடந்த 7 ஆண்டகளாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதனை பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த காஸ் ஏஜென்சியை வாங்கி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதில் தலைமறைவாக உள்ள மற்ற சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Panchayat ,Ghas Gudon ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு