×

சிதம்பரம் நகராட்சிக்கு குப்பை அள்ளும் மினி புல்டோசர்

சிதம்பரம், அக். 1: விஷக்காய்ச்சல் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நகராட்சி சார்பில் பெரியார் தெரு டிஇஎல்சி நகராட்சி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நகர்மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பேசினார். அப்போது, விஷக்காய்ச்சல் பரவலை தடுக்க 33 வார்டுகளிலும் முகாம் நடைபெறுகிறது, என்றார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வின், பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் வெங்கடேசன், மணிகண்டன், ராஜன், அப்பு சந்திரசேகரன், திமுக நகர அவைத்தலைவர் ராஜராஜன், நகர துணை செயலாளர்கள் விஜயா, பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அப்பு சத்தியநாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள குப்பை அள்ளும் மினி புல்டோசர் வாகனத்தை நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் இயக்கி தொடங்கி வைத்தார்.

Tags : Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...