மாதர் சங்க மாநில மாநாடு மாநகராட்சி மேயர் பங்கேற்பு

கடலூர், அக். 1: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில 16வது மாநாடு கடலூரில் நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று பொது மாநாடு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மாநிலம் முழுவதும் இருந்து தலைவர்கள் நினைவாக கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு அரங்கில் மாநில துணை தலைவர் அமிர்தம் கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் பிரமிளா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில தலைவர் வாலண்டினா தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே துவக்க உரையாற்றினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வாழ்த்தி பேசினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்தவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். இந்திய பெண்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மஞ்சுளா, அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர். முன்னதாக வரவேற்பு குழு தலைவர் ரேணுகாதேவி வரவேற்க, மாவட்ட தலைவர் மல்லிகா நன்றி கூறினார்.

Related Stories: