விருத்தாசலம், அக். 1: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சங்கரய்யா வரவேற்றார். வழக்கறிஞர் அம்பேத்கர் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் சங்கரன், மாநில செயல் தலைவர் கோதண்டம், மூத்த வழக்கறிஞர்கள் தில்லைவாணன், பூமாலைகுமாரசாமி, பாலச்சந்தர், விஸ்வேஸ்வரன், செல்வபாரதி, இளையராஜா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் அட்வகேட் புரடொக்க்ஷன் பில் 2021ஐ உடனடியாக சட்டமாக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்திட வேண்டும்.