×

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

திருவாரூர்,அக்.1: பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் புவன பிரியா செந்தில் தலைமையிலும், துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், கமிஷனர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர், அசோகன், அய்யனார், சின்னவீரன், வரதராஜன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பகுதி கோரிக்கைகள் குறித்து பேசியதுடன் நகர் முழுவதும் மழை காலத்திற்கு முன்னதாக பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்திட வேண்டும். வடிகால் வசதியினை சரி செய்திட வேண்டும்.

நகரில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு அதனை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். நாய் மற்றும் பன்றிகள் தொல்லையை தடுத்திட வேண்டும். போன்ற பல்வேறு பொதுவான கோரிக்கைகள் குறித்தும் பேசினர். கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளிகளில் துவங்கியுள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் நகராட்சி சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வது, நகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் பெயர் பட்டியல் குறித்து கைபேசி எண்ணுடன் பெயர் பலகை வைப்பது மற்றும் நகராட்சியின் 4 எல்லைகளிலும் பெயர் பலகை வைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. ,
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...