விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

பொன்னமராவதி,அக்.1: பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொன்னமராவதி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன், துணை தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின்கல வாகனம் வாங்குதல், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல், குடிநீர் விநியோக குழாய் அமைத்தல், புதிதாக சிறுமின் விசை இறைப்பான் அமைத்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், வடிகால் மற்றும் பாலம் அமைத்தல், ஆடு அடிக்கும் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் செய்திட சுமார் ரூ.39.60. லட்சம் மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக பொது நிதியில் ரூ.45 மதிப்பீட்டளவிற்கு பணிகள் தேர்வு செய்தல், வருவாய் கணக்குகளின் படி பொன்னமராவதி பேரூராட்சியின் எல்லையினை வரையரை செய்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகராஜன், மகேஷ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதஸ், சிவகாமி, முத்துலெட்சுமி மாரிமுத்து, இஷா விகாஷ், சாந்தி ஜெயராமன், அடக்கி பழனியப்பன், ராமநாதன், ராஜா, திருஞானம், சந்திரா சுரேஷ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: