நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி,அக்.1: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தின் முன் நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். ஆர்பாட்டத்தில் காலிப்பிணிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2012 பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் அயல்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமயனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கால தாமதம் செய்யாமல் உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் ராசப்பன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

Related Stories: