வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையினால் கொள்ளிடம்,காவிரியில் நீர்வரத்து அதிகமாகி நெல்,வாழை,கரும்பு போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டத்தை பெற வேண்டும். யூரியா,டிஏபி,பொட்டாஷ் போன்ற உரங்கள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல் கொள்முதலில் ஈரப்பதம் 17 சதவீதம் என அறிவித்திருப்பதை ஈரப்பதம் 20 சதவீதமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் நீரில் முழ்கி அழுகிய பாதிக்கப்பட்ட வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: