மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்

பெரம்பலூர், அக்.1: பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களை ஆய்வுசெய்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை வகித்தார். மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கருணாநிதி வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் இராஜாசிதம்பரம் பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 2019ஜூலைக்கு பிறகு நட த்தப்படுவதில்லை. பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர் வுகாண உதவிய நுகர்வோ ர் குறைதீர்க்கும்நாள் கூட்ட த்தைத் தொடர்ந்து நடத்த முன்வர வேண்டும். தமிழக அளவில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் மக் காச்சோளம், பருத்தி அதிகப்படியாக சாகுபடிசெய்ய ப்படும் பெரம்பலூர் மாவட் டத்திற்கு காரீப் பருவத்தி ற்கும், ராபி பருவத்திற்கும் தேவையான உரங்களை இருப்பு வைத்து தட்டுப்பாடி ன்றி விநியோகிக்க வேண்டும். கள்ளச்சந்தையில் கூடுதல் வி லைக்கு விற்பனையாகாமல் தடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் பேசியதாவது : விவசாயிகளிடம் தமிழக அரசு நேரடி யாக நெல் கொள்முதல் செய்கிறது. இதில் ஒன்றிய அரசு தனியாரை புகுத்த நட வடிக்கை எடுத்துவருவதை கைவிடவேண்டும். மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட விவசாய விளை பொருட்க ளுக்கு இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்த விலைக்கு கொ ள்முதல் செய்தால் வியாபா ரிகள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டும். இதனைக் கண்காணித்திட வேளாண் மைத்துறை, வருவாய்த்து றை, விவசாய சங்கப் பிரதி நிதிகள் கொண்ட கண்கா ணிப்புக்குழுவை அமைத்து க் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு படைப்புழு தாக்குதல் நடத்தியதுபோல, நடப்பாண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. அதற்காக மெட்டா லிக்சன், வேப்ப எண்ணை ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களை ஆய்வுசெய்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். 2021, 2022ஆம் ஆண்டுகளில் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இன்சூர ன்ஸ் செய்த அனைத்து பயி ர்களுக்குமான இன்சூரன் ஸ் தொகையை விரைந்து வழங்கவேண்டும். தீபாவளிக்குள் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.195ஐ 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 24 தனியார் ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கும் தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசியதாவது : மக்காச்சோளத்தில் மாவட்ட அளவில் படைப்புழு தா க்குதல் அதிகமாக உள்ளது. படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். பெரம்பலூர் தனியார் சர்க்கரைஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கான கரும்பு நிலுவை தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய நகைக் கடன் பெற்ற பயனாளிகளில் தமிழக அரசு தள்ளுபடி அறிவித்த பயனாளிகளின் நகைகளை உடனே திருப்பித் தரவேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் திமுக விவசாய அணி மாவட்ட செயலாளர் தங்கராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை, தமிழக விவசாயிகள் கட்சி தலைவர் ராமராஜ், வரதராஜன், தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: