நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரவக்குறிச்சி. அக்.1: பேரூராட்சி மற்றும் நகராட்சியைக் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு எம்பிசி கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சிகளில் கிராமப்புற பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்பட்ட பெண் குழந்தைகளுக்கு 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ 500, ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ ஆயிரமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் எம்பிசி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த கல்வி உதவித்தொகை பேரூராட்சி மற்றும் நகராட்சியில் அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகளின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கிட பெற்றோர்களும், ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுகின்றனர். மேலும் கிராமப்புற பகுதிக்கு கல்வி உதவித்தொகை வழங்க, கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் கையொப்பமிட்டு படிவங்களை மிகவும் பிற்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுடைய கல்வி உதவித்தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் தலைமை ஆசிரியர்களால் செலுத்தப்படுகிறது.

இதனால் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் தாமத நிலை உருவாகிறது. அவ்வாறில்லாமல், நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கிலேயே கல்வித் தொகை செலுத்தப்பட்டால், ஏழை மாணவிக ளுக்கு உய நேரத்தில் தொகை சிடைத்து, அவர்களுக்கு பேருதவியா இருக்கம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்து மாணவிகளுக்கு அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைக்கவும், இதற்குரிய விண்ணப்பங்களையும் கணினி வழியில் பெறவும் உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: