தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

கரூர், அக்.1: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரூர் கோவை ரோடு கொங்கு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.அதுசமயம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுக்குழு செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கரூர் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை செயலாளர் அருள்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: