×

கிராமங்களில் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்

ராதாபுரம், அக். 1: ராதாபுரம் யூனியனுக்குட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார். யூனியனுக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள், பஞ். தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமங்களின் குடிநீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சேர்மன் விஎஸ்ஆர் ஜெகதீஷ் உறுதி அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் பஞ். கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜா, ஞான சர்மிளா கெனிஸ்டன், முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், அரிமுத்தரசு, காந்திமதி, பஞ். தலைவர்கள் சற்குணராஜ், சேகர், முருகன், பொன் மீனாட்சி அரவிந்தன், வைகுண்டம் பொன் இசக்கி, அருள், பேபி முருகன், முருகேசன், முருகன், ராதிகா சரவணக்குமார், வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், சூசை ரத்தினம், மணிகண்டன், ஆனந்த், சாந்தா மகேஷ்வரன், வின்சி மணியரசு, வளர்மதி, சந்தனமாரி, சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு