நவம்பர் மாதம் மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்

நாகர்கோவில், அக்.1: நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை  மேயர் மேரி பிரின்சி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், நிர்வாக அதிகாரி ராமமோகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர்கள் தங்கராஜ், செல்வகுமார், அருள் சபிதா: நாகர்கோவில் மாநகராட்சியுடன் ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த பகுதிகளின் குடிநீர் கட்டணமாக R135 வசூல் செய்யப்பட்டு  வருகிறது. ஆனால் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்டணமாக R51 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. எங்கள் பகுதியில்  குடிநீர் கட்டணத்தை குறைக்கவில்லை.

முத்துராமன்: 51வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்னை  உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆணையர்  ஆனந்த் மோகன்: ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  குடிநீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது  நாகர்கோவில் நகருக்கு R251 கோடி செலவில் புத்தன் அணை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்யப்படும். மேலும் குடிநீர் பிரச்னையும் தீரும். மேயர்  மகேஷ்: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு R15 கோடி  வரி வசூல் அதிகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியை தன்னிறைவு  பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 52 வார்டுகளிலும் ஆய்வு  பணிகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் என்னென்ன பணிகள் நிறைவேற்ற  வேண்டும் என்பது குறித்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ,அந்த திட்டத்தை  செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்ரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில்  மாநகராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். முதலமைச்சர் வரும்போது நாகர்கோவில் மாநகர  பகுதியில் இனிவரும் 5 ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவை என்பதை பட்டியலிட்டு அவரிடம் கோரிக்கையாக வைத்து அந்த நிதியை  பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணிக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு  அளித்து வருகிறார்கள். அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உதயகுமார்: மாநகர பகுதியில் உள்ள குப்பைகள் சரியாக எடுப்பதில்லை. பல பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஆணையர்: மாநகராட்சி பகுதியில் 11 நுண்ணுரம் செயலாக்க மையங்கள்  உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினசரி 35 டன் வரை குப்பைகள் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த மாவட்டத்திலும் இதுபோன்று இல்லை. குப்பையில் இருந்து உரமாக்கும் திட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி  முன்மாதிரியாக விளங்கி வருகிறது. மேயர் மகேஷ்: நாகர்கோவில் மாநகர பகுதியில் நுண்ணுரம் செயலாக்கு மையங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.  குப்பைகள் சரியாக எடுக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயகுமார், விக்ரமன்:  ரோடுகளில் இருந்து   அகற்றப்பட்ட  மண் நாகராஜா கோயில் திடல், பொருட்காட்சி  திடல் ஆகிய இடங்களில் போடப்பட்டிருந்தது. அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம்   ரூ.28 லட்சம் குத்தகைதாரருக்கு கொடுத்தது. ஆனால் குத்தகைதாரர் ஒரு லோடு  மண்ணை ரூ.1500க்கு விற்பனை செய்து உள்ளார்.மேயர் மகேஷ்:  இது தொடர்பாக விசாரணை நடத்தி அதிகாரிகள் மற்றும்  ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வளர்மதி: வடசேரி  சின்னராசிங்கன் தெருவில் உள்ள ஓடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பயோனியர் தெருச் சாலையும் சரி செய்து கொடுக்க வேண்டும்.

ரமேஷ்: நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதனைப்  பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கம்பங்களில் நம்பர் போட்டால், எந்த மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்க வசதியாக இருக்கும். மேயர் மகேஷ்: அதிகாரிகளுக்கு வேலைபளு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும், 4  மண்டலமும் தனிதனியாக பிரித்து அடுத்த கவுன்சில் கூட்டத்திற்குள் மின்கம்பங்களில் நம்பர் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  விவாதம் நடந்தது.

Related Stories: