×

பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

உடுமலை,அக். 1:உடுமலையில் இருந்து நேற்று முன்தினம் குடிமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி வழியாக ஆமந்தகடவு நோக்கி அரசுபஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உடுமலை, பெதப்பம்பட்டியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயணித்தனர். பேருந்து வடுகபாளையம்-சனுப்பட்டி இடையே பாலம் ஒன்றில் சென்று வளைவான பகுதியில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து உப்பாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 20 மாணவிகள், 8 மாணவர்கள், 3 பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். மற்றும் ஹார்லிக்ஸ், பழங்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், காயமடைந்தவர்களுக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும். உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அப்போது, சண்முகசுந்தரம் எம்பி., முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் கண்ணாமணி, நகர மன்ற தலைவர் மத்தின்,

துணைத் தலைவர் கலைராஜன், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் அணிக்கடவு கிரி, கவுன்சிலர்கள் ஆறுச்சாமி, ஆசாத், பொதுக்குழு யுஎன்பி குமார், தங்கராஜ் (எ) மெஞ்ஞானமூர்த்தி, வஞ்சுகுமார்,ஆரோக்கியசாமி, பாலசுப்ரமணி, நாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Ministers ,
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...