நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, செப்.30: கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பிகே தாமஸ் நினைவு அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 410 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர். அதில் 5 பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Related Stories: