கோவையில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

கோவை, செப்.30: கோவை தமிழ்ச் சங்கமம், தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில்  நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும் மாநாட்டின் ஒருகிணைப்பாளருமான முனைவர் சுப்பிரமணியம் ஒன்றிய மற்றும் தமிழக அரசின் பல்வேறு தீர்மானங்களை வாசித்தார். அதில் மாநிலப் பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத்திட்டம் உள்பட தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழ்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மாணகள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பேரூர் அதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன், கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் காளிராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: