×

கால்நடை சார்ந்த தொழில்களுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், அக். 1: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்: ஆத்மா நிர்பார் பாரத் அபியான் தொகுப்பில் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை பால் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல், உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், மாட்டின மேம்பாட்டு தொழில்நுட்பம், கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை, விலங்கு கழிவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில்கள் தொடங்க விண்ணப்பித்து நிதியுதவி பெறலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் வங்கிக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். மொத்த மதிப்பீட்டில் 90 சதவீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடனாக பெற முடியும். பயனாளிகள் 10 முதல் 25 சதம் அளிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ராஜபாளையம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனை பெறலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...