×

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருவில்லிபுத்தூர், அக். 1: திருவில்லிபுத்தூரில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் 2022ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டுக்கான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, மேலாளர் பாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி புறத்தொடர்பு பணியாளர் சாந்தி, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் பேசுகையில், ‘நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்க வேண்டும். நகராட்சி மகளிர் குழு உறுப்பினர்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் வளரிளம் பெண்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும்’ என பேசினார். மேலும், இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் சுமார் 67 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி மின்வாரிய ஊழியர் திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Tags : Child Protection ,Committee ,Thiruvilliputhur Municipality ,
× RELATED பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு