கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கம்பம், அக். 1: தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கம்பம் மெட்டு வழியாக அனுமதி பெற்ற கனிம வளங்களான ஜல்லி, மணல் உள்ளிட்டவைகள் டிப்பர் லாரிகளில் நாள்தாறும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் பாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மீது கேரள இடுக்கி மாவட்ட மோட்டார் வாகன துறையினர் அடிக்கடி அபராதம் விதிப்பது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்டவைகளை செய்வதாக கூறி டிப்பர் லாரிகள் உரிமையாளர்கள் நேற்று கம்பம் கம்பமெட்டு புறவழிச்சாலையில் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சாலையில் நிறுத்தி போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட டிப்பர் லாரி சங்க செயலாளர் காஜாமைதீன் கூறும்போது, ‘தமிழக டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை இடுக்கி மாவட்ட மோட்டார் வாகன அலுவலர்கள் திட்டமிட்டு பழிவாங்குகின்றனர். அபராத தொகையாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விதிக்கின்றனர், மேலும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்கின்றனர். எனவே தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: