கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு

வருசநாடு, அக். 1: கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில், கண்டமனூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கண்டமனூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினசரி ஒரு குடும்பத்திற்கு 5 குடத்திற்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். சாலையோரங்களில் குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை பிடித்து குடித்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி கண்டமனூரில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: