×

மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்

மதுரை, அக். 1: மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கலந்துகொண்டு, ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் 200 பேர் பணியிட மாற்றம் பெற்றனர். மதுரை உள்மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலக பணியாளர்களை கட்டாய பணியிடம் மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதன்படி, கல்வித்துறையில் உள்ள அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த செப்.27ம் தேதி துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மேற்பார்வையில் நடந்த இந்த கலந்தாய்வில், அனைத்து கல்வித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவிக்கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள்,

இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில் 19 தட்டச்சர்கள், 134 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 47 உதவியாளர்கள் என 200 பேர் கலந்துகொண்டு, பணி இடங்களை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணியிடத்திற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் இன்று புதிய பணியிடத்தில் பொற்பேற்கின்றனர். மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்ற, அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு, அவர்கள் தேர்வு செய்த பணியிடத்திற்கான உத்தரவு சென்னையிலிருந்து விரைவில் வரும் எனத்தெரிகிறது.

Tags : Madurai District School Education Department ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு