தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம், கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் வகுப்பு II யை சேர்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இணை இயக்குநராகப் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன்கருதி பணியிடமாறுதல் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.அதன்படி சென்னை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்ககம் இணை இயக்குநர் II உமா என்பவர் சென்னை, தொடக்க கல்வி இயக்ககம், இணை இயக்குநராகவும் (நிர்வாகம்), சென்னை, தொடக்கக் கல்வி இயக்ககம், இணை இயக்குநர் (நிர்வாகம்) சசிகலா, தனியார் பள்ளிகள் இயக்ககம், இணை இயக்குநராகவும், சென்னை,

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், இணை இயக்குநர் அமுதவல்லி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் பணியிடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சசிகலா முழு கூடுதல் பொறுப்பாக வழங்கியும், தற்பொழுது அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இணை இயக்குநராகப் பணிபுரியும் செல்வகுமார் முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும் பொது நூலக இயக்கக இணை இயக்குநர் பணியிடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அமுதவல்லி என்பவருக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: