நவ.8ம் தேதி நடக்கிறது: ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் கூட்டத்தினை சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, நவம்பர் 8ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 8ம் தள கூட்ட அரங்கில் நடத்த உள்ளார்.

எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62 ராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரிக்கு வருகிற 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: