பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவு தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தண்டையார்பேட்டை: தமிழக  அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதற்காக அந்தந்த பகுதிகளில் தனியாக சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம் சூரிய நாராயணர் சாலை, கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையம், கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான  சிற்றுண்டி சமைக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால் லீனா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தொடக்க பள்ளிகளுக்கு சென்று, சிற்றுண்டி சாப்பிடும் மாணவர்களிடம் உணவு தரமாக உள்ள ac ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரகாஷ், உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: