அப்துல்கலாம் பிறந்தநாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு இளைஞர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதியும், தமிழர்களின் அடையாளமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவ சிலையோடு அவரது பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தின் பெருமையை உணர்ந்து இதை அறிவிக்க வேண்டும். மேலும் அக்டோபர் 15ம் தேதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை இந்திய அரசு தேசிய விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: