×

இதய வடிவிலான பலூன்கள் பறக்கவிட்டு விழிப்புணர்வு

திருச்சி,செப்.30: உலக இருதய தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதய வடிவிலான பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் உலக இருதய தின தலைப்பான உங்கள் இதயத்தை காத்து மற்றவர்கள் இதயத்தை மீட்ெடடுங்கள் என்ற தலைப்பின் கீழ் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் நேரு, கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ், இருதய அறுவைசிகிச்சை நிபுணர் ஜெய்சங்கர், உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இருதயத்தை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற நாடகமும் நடைபெற்றது.

காலிமனைகளில் மழைநீர் தேங்கினால் உரிமையாளர்களுக்கு அபராதம்
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பேசியது:தமிழக அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.  ரங்கத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் ரங்கம் கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து, சுமார் 8 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு தரவேண்டியுள்ளது. விரைவில் அந்த நிலம் தரப்படவுள்ளது. அதில், கோயிலுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் அமைக்கவும், மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும். மாநகராட்சியில் மேலும் புதிய சாலைகள் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காலி மனைகளில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக தெரியவருகிறது. எனவே, அவற்றை ஒரு வார காலத்துக்குள் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தூய்மை படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு