இதய வடிவத்தில் நின்று 1000 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு

திருச்சி, செப்.30: உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், பிட் கேம்பஸ் இணைந்து நிகழ்த்திய மனித இதய வடிவ உருவத்தை சுமார் 1000 மாணவ, மாணவிகள் உதவியுடன் வடிவமைத்து சாதனை புரிந்தது. இதனைத்தொடர்ந்து இருதய பாதுகாப்பிற்கான நடை பயிற்சி மற்றும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வெஸ்ட்ரீ பள்ளியில் நடைபெற்றது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் இருதய நலம் மற்றும் இருதய சிகிச்சை தொடர்பான கண்காட்சி காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டி கண்டோன்மெண்டில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: