விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்

தஞ்சாவூர் செப். 30: விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று தஞ்சாவூரில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்த வெளி அரிசி சேமிப்பு கிடங்கில் புதியதாக கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நேரில் பார்வையீட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர், ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2160, பொது ரகத்துக்குக ரூ.2015 வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் சேமிக்க, முதல்வர் உடனடியாக எந்த அரசும் செய்யாத வகையில், இந்தாண்டு 3 லட்சம் செமி குடோன்கள் கட்ட ரூ.231 கோடி நிதி ஒதுக்கி தமிழகம் முழுவதும் 20 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட குடோன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வரும் அக்.31 ம் தேதிக்குள் நிறைவடையும்.

நடப்பு கொள்முதல் பருவத்தில் 72,816 ஹெக்டேர் கொள்முதல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 318 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தால் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். என்றார்.

Related Stories: