×

தஞ்சாவூரில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

தஞ்சாவூர், செப். 30: அப்தமித்ரா 3 வது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பயிற்சியை தஞ்சாவூர் பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி முன்னிலையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜ் துவக்கி வைத்தார். 9 தாலுகாவிலிருந்து 30 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய பயிற்சியில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். வினோத் மற்றும் மருத்துவர்கள் தாய் மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும்,

பேரிடரின் போது என்ன விதமான அவசர சிகிச்சை முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்பது குறித்தும், தமிழக முதல்வரின் நம்மை காக்கும் 48 திட்டம் உயிர் காக்கும் உயர் சிகிச்சை குறித்தும் தன்னார்வலர்களுக்கு விளக்கினர். நிகழ்வில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர். முத்துக்குமார், பயிற்றுநர்கள் ஜெயக்குமார், பிரகதீஷ், திரு. பெஞ்சமின், சுரேஷ் குமார், பயோகேர் முத்துக்குமார் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...