அக்.2 மனித சங்கிலி போராட்டம் ஆதரவு கேட்டு அனைத்து கட்சி பிரசாரம்

தஞ்சாவூர், செப்.30: அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் செய்தனர். மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மேலும் பதட்டத்தையும், கலவரத்தையும் தூண்டுகின்ற செயலாகும். இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி அமைப்புகள் அக்.2ம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்த உத்திராபதி,வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜார்ஜ் துரை, திருநாவுக்கரசு சேவையா, கோவிந்தராஜன், கிருஷ்ணன், முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், மனோகரன், சரவணன், கரிகாலன்,கோஸ்கனி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஜெய்சங்கர், தமிழ்முதல்வன், யோகராஜ் , தமிழ்ச்செல்வி, சிவதமிழ்நீதி,சுரேஷ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன்,ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: