(தி.மலை) சமூக முன்னேற்றத்துக்கு பணியாற்றிய பெண்களுக்கு மாநில அரசு விருது * உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் * மாவட்ட கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, செப்.30: திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள், அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளர். திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் ேததி மாநில அரசின் விருது மற்றும் ₹1 லட்சம் காசோலை வழங்கப்படுகிறது. அதன்படி, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், சிறப்பான மற்றும் தனித்துவமான சாதனை செய்திருத்தல், சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வுவை ஏற்படுத்தியிருத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள், மாநில அளவிலான தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். அக்குழுவினர், தகுதியுள்ள நபர்களை விருதுக்கு தேர்வு செய்வார்கள்.

எனவே, விருதுக்கான முன்மொழிவுகளை, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்), காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம். உரிய விண்ணப்பங்கள் மற்றும் முன்மொழிவுகளை, வரும் நவம்பர் 23ம் தேதிக்குள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: