விற்பனைக்கு குவிந்த அலங்கார தோரணங்கள்

சேலம், செப்.30: ஆயுதபூஜை விழாவின் போது வீடு, கடைகளில் அலங்கரிக்கப்படும் ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு வீடு மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சுத்தம் செய்து ேதாரணங்கள் கட்டுவது வழக்கம். நடப்பாண்டு ஆயுதப்பூஜை வரும் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், கடைவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்படும் ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செவ்வாய்பேட்டையை ேசர்ந்த வியாபாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு வீடு மற்றும் கடைகளில் தோரணங்களால் அலங்கரிக்கப்படும்.

இந்த ஜிகினா அலங்கார தோரணங்கள் சென்னை, சிவகாசி, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆயுதப்பூஜைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில், ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இதை சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஜிகினா அலங்கார தோரணம் ₹10 முதல் ₹100 வரை விற்கப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: