உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்

மல்லசமுத்திரம், செப்.30: மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை நாகர்பாளையத்தில், திருமணிமுத்தாறு வளர்பிறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், 2ம்ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் லோகநாதன் வரவேற்றார். முதன்மை செயல் அலுவலர் அனிதா நிதிநிலை அறிக்கை வாசித்தார். குழுஉறுப்பினர்கள், பங்குதொகை, உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்கள், விதைகள் மற்றும் உரங்கள் விற்பனை மையம், கொள்முதல்,

 விற்பனை, வணிக தொழில்நுட்பங்கள், நிறுவனம் தொடர்பான நடவடிக்கைகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண் உட்கட்டமைப்பு நிதிதிட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இயக்குனர் பூபதி நன்றி கூறினார். எலச்சிபாளையம் வேளாண் உதவி இயக்குனர் ஜெயமணி, மல்லசமுத்திரம் வேளாண் உதவி இயக்குனர் தனம், நிர்வாகிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: