கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, செப்.30: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி, அலுவல் துணை தாசில்தார் சுரேந்திரன் மற்றும் ஆர்ஐ கிருஷ்ணப்பா மற்றும் குழுவினர், நேற்று காலை அஞ்செட்டி சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி கிரானைட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

ஒரு லாரியில் ₹1லட்சம் மதிப்பிலான 3 கிரானைட் கல்லும், மற்றொரு லாரியில் ₹75 ஆயிரம் மதிப்பிலான கிரானைட் கல்லும் இருந்தன. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். , எஸ்ஐ கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: