பைனான்ஸ் நிறுவனத்தில் ₹1 லட்சம் திருட்டு

தர்மபுரி, செப்.30: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குள்ளபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (42). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி மாலை, அலுவலகத்தை  பூட்டி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ₹1 லட்சம் திருடுபோய்  இருந்தது. இதுபற்றி பாலக்கோடு போலீசில் செந்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: