திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் மாயம்

கோவை, செப்.30:  திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இளம்பெண் கோவையில் உள்ள தனது தந்தை வீட்டில் இருந்தார். மனைவியை காண வந்த வாலிபர், கடைக்கு செல்வதாக கூறி மொபட்டில் சென்றார். பின்னர் அவர் வரவில்லை. அவர் மொபட்டை நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் முன் நிறுத்தி விட்டு மாயமாகி விட்டதாக தெரியவந்தது. சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: