பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பவானி, செப். 30:  சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில்  பவானி வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா பவானியில்  நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.பி.துரைராஜ் (பவானி தெற்கு), பவானி கே.ஏ.சேகர் (பவானி வடக்கு), பவானி நகராட்சி துணை தலைவர் சி.மணி, திமுக மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், அவை  தலைவர் மாணிக்கராஜ், திமுக நகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட  திட்ட அலுவலர் பூங்கோதை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜனனி, பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் பங்கேற்ற 150 கர்ப்பிணிகளுக்கு தட்டு, வளையல், புடவை, மஞ்சள், குங்குமத்துடன் 5 வகையான உணவு வழங்கப்பட்டது. மேலும் நகராட்சி பொறியாளர் கதிர்வேல், நகராட்சி கவுன்சிலர்கள் மா.சுப்பிரமணியம், மோகன்ராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், விஜய் ஆனந்த், கோகிலாம்பாள், பாரதிராஜா, கவிதா உதயசூரியன், முன்னாள் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் அங்கம்மாள், ருக்மணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் வி.சக்திவேல், வட்டார திட்ட உதவியாளர் சரண்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: