×

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து வாட்ஸ் அப்ஸில் தெரிவிக்கலாம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம், டிஆர்ஓ ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஆர்ஓ பேசுகையில், ‘அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்து உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, பான்மசாலா விற்பனை கூடாது. உணவுகளை பொட்டலமிட பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. காலாவதியான உணவுப் பொருள், குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது.

தெருவோரக்கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் உட்பட அனைவரும் சுத்தமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். தரமான பொருட்களை வைத்து உணவு தயாரிக்க வேண்டும். உணவு எண்ணெயை ஒரு முறைக்கு மேல்பயன்படுத்த கூடாது. இறைச்சி, மீன்கடைகளில் கெட்டுப்போன நாள்பட்ட இறைச்சி, மீன்கள் விற்பனை செய்யக்கூடாது. விதிமீறல்கள் இருந்தால் அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருள் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்’ என தெரிவித்தார்.

Tags : WhatsApp ,
× RELATED கோடை வெயில் தாக்கத்திலிருந்து...