மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தேவதானப்பட்டி, செப். 30: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே, ஜெயமங்கலத்தில் உள்ள காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா (51), விவசாய கூலித்தொழிலாளி. இவர், ஜெயமங்கலம் வாய்க்கால் பாலம் அருகே, முப்பிடாரி அம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள வயலுக்கு நேற்று கூலி வேலைக்கு சென்றார். கருப்பையா மற்றும் கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பையா அருகில் இருந்த மரத்தை தொட்டுள்ளார்.

அதன் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பியின் மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ராஜபாண்டி (33) அளித்த புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: