ஆட்டோ டிரைவர்கள் மோதல்; ஒருவர் கைது; 3 பேர் பேருக்கு வலை

தேவதானப்பட்டி, செப். 30: தேவதானப்பட்டி அருகே, ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (30). இவர், நேற்று முன்தினம் சில்வார்பட்டி பள்ளி குழந்தைகளை சவாரி ஏற்றுவதற்காக, ஜெயமங்கலத்திலிருந்து சில்வார்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சில்வார்பட்டி பஸ்நிலையத்தில், ஆட்டோவுக்கு பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ ஹாரன் அடித்துக்கொண்டே வந்தது.

பின்னர் பகவதியம்மன்கோவில் பஸ் ஸ்டாப்பில், பின்னால் வந்த ஆட்டோ டிரைவர் எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜவேல் என்பவர், பாண்டியராஜனின் ஆட்டோவை வழி மறித்து தகராறு செய்துள்ளார். மேலும், ராஜவேலுக்கு ஆதரவாக டூவீலரில் வந்த 3 பேரும், பாண்டியராஜனை கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பாண்டியராஜன் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜவேலை கைது செய்து மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: