பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்

ராமநாதபுரம்,செப்.30: திருவாடானை அருகே சாந்திபுரத்தை சேர்ந்தவர் மல்லிகன். இவரது மனைவி கடன் பெற ஆன்லைன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அவர் கடன் எதுவும் பெறாமலேயே ரூ.2 ஆயிரத்து 275 ஐ செலுத்தாமல் உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. போனில் பேசிய நபர் கூடுதல் பணம்  கேட்டு மிரட்டினார். செலுத்தாவிட்டால் உருவப்படத்தை ஆபாசமாக இணையதளத்தில் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் அவர்கள் கேட்ட ரூ.2.48 லட்சம் செலுத்தினார். ஆனாலும் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: