பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரணடைந்தனர்

திண்டுக்கல், செப். 30:திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் கடந்த செப்.24ம் தேதி பாஜக பிரமுகர் செந்தில்பால்ராஜ்க்கு சொந்தமான குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 5 டூவீல்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர். இதில் வாகனங்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்து,  மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ஹபீப் ரகுமான் (27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகியோர் நேற்று  திண்டுக்கல் நீதிமன்றம் ஜேஎம்- 3ல் சரணடைந்தனர். நீதிபதி ரங்கராஜ் 3 பேரையும் 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories: