போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகிளா கோர்ட் அதிரடி

திண்டுக்கல், செப். 30: பழநி உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள சண்முகாநதி பகுதியை சேர்ந்தவர் சுல்தான் மைதீன் (32).  இவர் பள்ளி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 2019ம் ஆண்டு பழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ேபாலீசார் சுல்தான் மைதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் சுல்தான் மைதீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் இவரை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Related Stories: