பள்ளிப்பட்டு, செப். 29: மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவில் பேரில் மாவட்டத்தை பசுமையாகமாற்றி தூய்மை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்படி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது. அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமை வகித்தார். அங்குள்ள மலை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் 400க்கும் மேற்பபட்ட தேசிய ஊராக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பைவலசா ஊராட்சி வனப்பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில், தேசிய ஊராக வேலை உறுதி திட்ட பெண்கள் உட்பட கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மரக்கன்றுகள் நட்டனர். மலை சார்ந்த பகுதியில் உள்ள பைவசா ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பசுமையான கிராமமாக மற்றும் முயற்சியில் ஊராட்சி சார்பில் மேற்கொண்டனர்.
இத் திட்டத்திற்கு கிராமமக்கள் ஆதரவு தந்து பங்கேற்றனர். பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டு பைப் லைன் அமைத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படுகிறது. மேலும் கிராமத்தில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும் ஏற்பாடுகளில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதில் திருத்தணி கோட்ட உதவி செயற்பொறியாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், அருள்,ஒன்றிய பொறியாளர் சாவித்திரி, பணி மேற்பார்வையாளர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சந்திரவிலாசபுரம் ஊராட்சி தலைவர் வி.ஜி.மோகன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணியில் 200க்கும் மேற்ப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துக்கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஜனகரஜகுப்பம் ஊராட்சி தலைவர் ராமசாமி தலைமையில் மரக்கறுகள் நடும் பணி நடைபெற்றது. எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி தலைவர் சத்தியராஜ் தலைமையில் மரக்கன்றுகள் நடைபெற்றது. இதேபோல் பள்ளிபப்ட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.