×

திருவிடைமருதுார் அருகே போதேந்திர சரஸ்வதி சுவாமி மகோற்சவம்

திருவிடைமருதுார், செப். 29: திருவிடைமருதுார் அருகே கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தில் 330வது ஆண்டு ஆராதனை மகோத்சவம் 14 நாட்கள் நடந்தது. காஞ்சி காமகோடி மடத்தின் 59வது பீடாதிபதியாக பரிபாலனம் செய்த ஜகத்குரு பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் கோவிந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாளயபட்ச பவுர்ணமி தொடங்கி ஆராதனை மகோத்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. அந்த வகையில் 330வது ஆண்டு ஆராதனை மகோத்சவம்14 நாட்கள் நடந்தது. முதல் நாள் ஆக்யா பூஜை, திதி ஆராதனை, வீதி பஜனையுடன் குருநாதாளின் புறப்பாடு நடந்தது. 2வது நாள் முதல் 14 நாட்கள் தினமும் காலை 5.30 மணிக்கு தொடங்கி ப்ரபோதன பூஜை, மத் ராமாயணம், மூல பாராயணம், உஞ்சவ்ருத்தி, பாகவத பெரியோர்களால் சம்ப்ரதாய அஷ்டபதி பஜனை செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு பூஜை, தீபாராதனை, பாகவத ஆராதனை நடந்தது.

மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய 2 நேரங்களில் கிருஷ்ணபிரேமி சுவாமிகளால் மத் ராமாயணம் உபன்யாசம் நடந்தது. மேலும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் நிறைவாக 23ம் தேதி ஆஞ்சநேய உத்சவம், விடையாற்றி உத்சவம் நடந்தது. இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Saraswati Swamy ,Thiruvidaimaruduar ,
× RELATED உறுப்பினர்கள் சேர்க்க ஏதுவாக 42 கைத்தறி கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம்