கொரோனா தடுப்பூசி முகாம்

பேராவூரணி , செப்.29: பேராவூரணி வர்த்தகர் கழகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் வர்த்தகர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் குத்து விளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தார். வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமில் வர்த்தகர் கழக கட்டுப்பாட்டுக் கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன், அன்பழகன், சிதம்பரம், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் செயலாளர்கள் பாரதி நடராஜன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: