×

பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்து செய்ய வெண்டும்

திருவிடைமருதூர், செப். 29: பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியைமுழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று திருபுவனத்தில் நடந்த சிஐடியு சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டு மற்றும் நுால் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரன், துணைத் தலைவர்கள் ராமாச்சாரி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபால் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்க செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளை முறையே செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் அனந்தராமன் ஆகியோர் படித்தனர். தஞ்சாவூர், அரியலுார் மாவட்ட பொறுப்பாளர்கள் துரைராஜ், கண்ணன், ஜீவபாரதி மற்றும் பலர் பேசினர்.

தற்போதைய கைத்தறி சேலை தயாரிப்பில் உள்ள நடைமுறைகளில் புதிய தொழில்நுட் பங்களை புகுத்துவது, விற்பனைக்கு ஏற்ற ரகங்களை எளிமையான முறையில் தயாரித்து நெசவுத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்க முயற்சி மேற்கொள்வது, அரசின் உதவி கோருவது குறித்த விவாதம் நடந்தது. கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா திட்டம் அமல்படுத்த வேண்டும். கோரா பட்டின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியைமுழுவதுமாக ரத்து செய்ய வெண்டும். மழைக்கால நிவாரணம் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு