×

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர், செப். 29: தஞ்சாவூர் பெரிய கோயில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பு மிக்க ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் கோயில் வெளிப்புறங்களில் புகைப்படங்கள் எடுத்து செல்வது வழக்கம்.

அனைத்து பிரதோஷ காலங்களிலும் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் வெளிப்புற மதில் சுவர் பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது மதில் சுவர் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்,சிமெண்ட் பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி சுண்ணாம்புகல், வெல்லம், கடுக்காய் உள்ளிட்ட பொருட்கள் கலவையாக கொண்டு செங்கல் தயாரிக்கப்படுகிறது.  அதன் பிறகு சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : Thanjavur Big Temple ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...